ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோயில் பகுதியில் இருக்கும் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை நோக்கி சென்ற காரும், ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் செளர்ந்தர பாண்டியன், தங்கவேலு, மகாலிங்கம், நம்பியார், முனீஸ்வரி, பார்த்தசாரதி, ரேவதி, ஜோதிலட்சுமி என 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.