விழுப்புரம்: வளவனூர் பேரூராட்சி பஞ்சாயத்து போர்டு தெருவைச் சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு ஒரு சிலர் உணவுகள் அளித்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தெருவில் உள்ள நாய்கள் ஒவ்வொன்றாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.
அதனால் சந்தேகமடைந்த நாய்களின் உரிமையாளர்கள், பஞ்சாயத்து போர்டு தெருவிலுள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமராவின் பதிவில் இரவு நேரங்களில் தெருவில் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது, சில இளைஞர்கள் வந்து நாய்களை அடித்துக் கொன்று தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்துள்ளது.