விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட லோகு (எ) லோகநாதன் என்பவர் தொடர்ந்து அடிதடி, கொள்ளை, கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது வந்த தொடர்புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். எஸ்பியின் உத்தரவை தொடர்ந்து லோகநாதனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
சமூகவிரோத செயலில் ஈடுபட்டவர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் - villupuram
விழுப்புரம்: சங்கராபுரம் அருகே தொடர்ந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லோகநாதன்
அவரது உத்தரவின் பேரில் லோகநாதனை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.