விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சுரேஷ். இவர் நேற்று (செப்.1) இரவு பட்டா கத்தியுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். மேலும், இந்த காணொலியை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது பிறந்தநாள் காணொலி வைரலாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்...! இருவர் கைது - villpuram district news
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில் பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பட்டாகத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
இதையடுத்து, சுரேஷ், அவரது நண்பர் விஜயராஜன் ஆகிய இருவரையும் பிரம்மதேசம் காவல் துறையினர்கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சுரேஷ் என்பவர் சமீபகாலமாக கத்தியுடன் சுற்றி வருவதும், வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மதுபானம் வாங்கி விட்டு கத்தியை காட்டி மிரட்டும் ரவுடிகள்: வைரலான சிசிடிவி காட்சிகள்