விழுப்புரம்: காரில் லிட்டர் கணக்கில் எரிசாராயம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறையினர், காரை பறிமுதல் செய்தனர்.
காரில் சாராயம் கடத்திய இளைஞர் கைது - 185 லிட்டர் சாராயம் பறிமுதல் - க்ரைம்
மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கீதா விசாரணையில், எரிசாராயம் கடத்திச் சென்றது மருவூர் ராஜா என்பதும், ராஜாவின் உறவினர் விஜய் என்பதும் தெரியவந்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஆவணிப்பூர் கிராமத்தில் மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர் அழகிரி உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆவணிப்பூர் கூட்டுப் பாதை அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் வந்த மூன்று நபர்களில் இரண்டு நபர்கள் தப்பியோடினர்.
விழுப்புரம் அடுத்த தோகைப்பாடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் விஜய் (21) என்பவரை போலீசார் பிடித்தனர். காரில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களில் எரிசாராயம், 100 பாக்கெட் சாராயம் உட்பட மொத்தம் 185 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது. விஜய்யை கைது செய்த மத்திய புலனாய்வு போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், எரிசாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் கீதா விசாரணையில், எரிசாராயம் கடத்திச் சென்றது மருவூர் ராஜா என்பதும், ராஜாவின் உறவினர் விஜய் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் மீது வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ரெட்டனை பகுதியை சேர்ந்த தேவா உள்ளிட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.