விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள கச்சிராயபாளையம் அருகே இருக்கும் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வேங்கை முத்து. இவரின் மகளான வீரம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ., ஆங்கிலம் படித்துவருகிறார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை தனது பாட்டிக்கு உணவு எடுத்து சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்க்கு வந்த வீரம்மாள் உடனடியாக வெளியே சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.
இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்பு ஆனால், இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
இந்நிலையில், அதே கிராமத்தில் உள்ள கோவிந்த சாமி என்பவரின் விவசாய கிணற்றில் வீரம்மாள் பிணமாக கிடப்பதாக தகவல் கிடத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர்கள் கச்சிராயபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வீரம்மாளின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பான விசாரணையில் வீரம்மாள் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வருவதாகவும் நேற்று மாலையும் காதலனுடன் பேசியதாகவும் சிலர் காவல் துறையினரிடம் தெரிவித்தனர் . இதன் அடிப்படையில் காதலன் உட்பட மூவரை காவல் துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.