விழுப்புரம், மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். கட்டட கூலித்தொழிலாளியான இவருக்கு வனிதா(25) என்ற மனைவி உள்ளார். இவர் இளங்கலை பட்டதாரி ஆவார். இவர்களுக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு, வனிதா வீட்டில் கணவர் பிள்ளைகளைத் தூங்க சொல்லி விட்டு, தனது மாமியார் வீட்டிற்குச் சென்று அவருடன் உறங்கிக் கொண்டிருந்தார்.
இன்று காலை ஆறு மணியளவில், தனது வீட்டிற்கு வந்தவர் சிறிது நேரத்தில் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது கணவர் அறிவழகனும், குழந்தைகளும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவழகனின் தம்பி வீட்டிற்கு வந்து அவர்களை எழுப்ப முயன்ற போது, வனிதா தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.