விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். அவர் நேற்று மாலை தனது தாய் அய்யம்மாளுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். இவர்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், செந்தில் தலைக்கவசம் அணியாமல் வந்ததால் அவரது வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால், காவல் துறையினருக்கு பயந்து செந்தில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் செந்திலை தாக்க முயன்றுள்ளனர். இதில் செந்தில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்துவிட்டார். அப்போது இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த அய்யம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.