தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எங்கே எனது வேலை?' - கையெழுத்து இயக்கம் - Signature campaign in vilupuram

விழுப்புரம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 'எங்கே எனது வேலை?' என்கிற தலைப்பில் மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம்

By

Published : Mar 2, 2020, 5:33 PM IST

விழுப்புரம் மாவட்டம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 'எங்கே எனது வேலை?' என்கிற தலைப்பில் இன்று மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற விழுப்புரம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த கையெழுத்து இயக்கம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு மற்றும் ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப புதிய அரசு பணியிடங்களை உருவாக்க வேண்டும், வேலை இல்லாத காலங்களில் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம்

இந்த கையழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டு தொடக்கிவைத்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:போலி ஆதாரில் இந்தியாவில் உலாவிய வெளிநாட்டுப் பெண்: மடக்கிப்பிடித்த மதுரை காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details