தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் ஆய்வாளரை தள்ளிவிடும் விசிக தொண்டர்- வைரலாகும் வீடியோ!

விழுப்புரம்: ஆர்ப்பாட்டத்தின் போது பெண் காவல் ஆய்வாளர் ஒருவரை விசிக தொண்டர் தள்ளிவிடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vilupuram-protest-against-vck
vilupuram-protest-against-vck

By

Published : Oct 28, 2020, 10:21 AM IST

இந்துமத பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கபட்டது. பின்னர் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்த வந்த பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல்துறை வாகனத்தை மறித்து பாஜகவினரை தாக்க முயன்றனர். பின்னர் வாகனம் புறப்பட்டது.

பெண் ஆய்வாளரை தள்ளிவிடும் விசிக தொண்டர்

அப்போது மீண்டும் வாகனத்தை மறித்த விசிக தொண்டர் ஒருவரை அப்புறபடுத்த வந்த பெண் ஆய்வாளரை அந்த தொண்டர் தள்ளிவிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் சம்பந்தப்பட்டவரை கைது செய்யக்கோரி காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

மீனவர்கள் மீது தாக்குதல்... இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்க மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details