விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையம், ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு மையங்களில் கடந்த மாதத்திலிருந்து கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விழுப்புரம் ஆட்சியர்! - கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விழுப்புரம் ஆட்சியர்
விழுப்புரம்: மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
மாவட்டத்தில் முன் களப்பணியாளர்கள் 10 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ள நிலையில், புதன்கிழமை வரை 2 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் இன்று (பிப்.4) விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 'அரசு வழங்கும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக' ஆட்சியர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி!