தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

VIDEO: 'முதல்வன்' திரைப்பட பாணியில் அபராதம்.. விழுப்புரம் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு!

தனியார் பேருந்தில் ஆபத்தை உணராமல் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி சென்றதால் மாவட்ட ஆட்சியர் பேருந்தை நிறுத்தி, முதல்வன் பட பாணியில் நடத்துனருக்கு அபராதம் விதித்த ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து சென்றார்.

முதல்வன் பட பாணியில் நடத்துனருக்கு அபராதம் விதித்த ஆட்சியர்
முதல்வன் பட பாணியில் நடத்துனருக்கு அபராதம் விதித்த ஆட்சியர்

By

Published : Nov 25, 2022, 11:46 AM IST

விழுப்புரம்: விழுப்புரம் - செஞ்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அச்சமயம் விழுப்புரம் மாவட்டம், குன்றத்தூரில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் மோகன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், தனியார் பேருந்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்று கொண்டு இருப்பதை பார்த்த ஆட்சியர் பேருந்தை மடக்கி நிறுத்தினார். இதையடுத்து ஆட்சியர் விதிமுறைகளை மீறி செயல்பட்ட பேருந்தின் நடத்துனருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டினார்.

முதல்வன் பட பாணியில் நடத்துனருக்கு அபராதம் விதித்த ஆட்சியர்

மேலும் படியில் பயணம் செய்த மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் இந்நடவடிக்கை பயணிகளை மட்டுமல்லாது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:சொத்து குவிப்பு: பெண் காவலர் பணியிடை நீக்கம்!

ABOUT THE AUTHOR

...view details