விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி மற்றும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு இன்று(செப்.28) நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியான சேலம் மாவட்ட முன்னாள் எஸ்பி குணசேகரன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.