விழுப்புரம் மாவட்டமாக அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை விழுப்புரம் மாவட்டத்திற்கென்று அருங்காட்சியகம் அமைக்காதது அம்மாவட்ட மக்களுக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அருங்காட்சியகம் அமைக்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து அருங்காட்சியகம் அமைப்பு - கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருங்காட்சியகம் இல்லாத விழுப்புரம்! கண்டுகொள்ளுமா அரசு? - museum
விழுப்புரம்: அரசு அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தி, அருங்காட்சியகம் அமைப்பு - கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் வரலாற்று சின்னங்கள், கோயில்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என ஏராளமான பொக்கிஷங்கள் இருந்தும் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க இடமின்றி வீணாகி வருவதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மாவட்டத்தின் சிறப்பு குறித்து அறிந்துகொள்ள முடியவில்லை, சிதைந்து வரும் வரலாற்று தொன்மைகளை பாதுகாத்திட உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.செங்குட்டுவன் தலைமை வகித்தார். மேலும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.