விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர், அவலுர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பனை காடுகளில் உள்ள பனை மரங்களிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பனங்கள் இறக்கி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
கள் இறக்கினால் கடும் நடவடிக்கை! காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
விழுப்புரம்: பனங்கள் விற்பனை புகார் தொடர்பாக கஞ்சனூர் பகுதியில் பனை காட்டில் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கள் இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
கள் இறக்கினால் கடும் நடவடிக்கை! காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கைவிழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் பனை காட்டில் திடீர் ஆய்வு
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கஞ்சனூர் பகுதியில் இருந்த பனை காட்டில் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பனை மரங்களில் கட்டப்பட்டிருந்த பானைகளை, மரம் ஏறும் தொழிலாளர்களின் உதவியுடன் கீழே இறக்கி பார்வையிட்டார். தொடர்ந்து பேசிய அவர் தடைசெய்யப்பட்ட பனங்கள்ளை இறக்கி விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.