தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் குண்டாஸ்! - குண்டாஸ் சட்டம்

விழுப்புரம்: பண்டிகை காலங்களில் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

police
police

By

Published : Jan 16, 2020, 10:27 PM IST

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டடக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,

"இந்த ஆண்டு பொதுமக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையின்போது, 15.01.2020 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட சூரிய பொங்கல் தினத்தன்று கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராம பேருந்து நிறுத்தம் அருகே ஆதிதிராவிட தரப்பினருக்கும், முட்டத்தூர் வன்னியர் தரப்பினருக்கும் ஆட்டோ ஓட்டுவது தொடர்பாக இருந்த முன்விரோதம் காரணமாக அவர்களிடையே குடிபோதையில் மோதல் ஏற்பட்டு கஞ்சனூர் காவல் நிலையத்தில் இரு பிரிவினர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பிலும் 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் தமது குடும்பத்தாருடன் ஒற்றுமையோடும், மன மகிழ்வோடும் கொண்டாட வேண்டும் தவிர, முன் விரோதப் போக்கை மனதில் வைத்துக்கொண்டு பண்டிகை காலங்களில் பிரச்னை செய்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது சட்டவிரோத செயல் மட்டுமன்றி வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.

அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் எவரானாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது எனவும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதுடன், பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு அச்சமும், இயல்பு வாழ்க்கைக்கு பங்கமும் ஏற்படுத்தும் செயல்களுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நேரிடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details