விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் ரயில்வே இருப்பு பாதையில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை சம்பவ இடத்திற்கு ரயில்வே காவல் துறையினர் உட்பட எவரும் வரவில்லை. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத ஆண் சடலம் -அதிர்ச்சியில் மக்கள் - ஆண் சடலம்
விழுப்புரம்: பரிக்கல் ரயில்வே இருப்புப் பாதையில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆண் சடலம்
இறந்தவரின் சடலம் அதே இடத்தில் இருப்பதால் மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளனர். மேலும், இறந்தவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்துள்ளனரா? என்பது குறித்து தெரியாததால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.