தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எல்லைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - corona virus

விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட எல்லைப் பகுதிகளில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கரோனா
கரோனா

By

Published : May 2, 2020, 11:03 AM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க செல்வதாக கூறி, ஊர் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்டம், தனிமைப்படுத்தப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேற்று அறிவித்தார். இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட எல்லைப் பகுதிகளான திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்காக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதை அம்மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவசியமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details