தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரத் பந்த்; விழுப்புரத்தில் 3 ஆயிரம் கடைகள் அடைப்பு - delhi farmers struggle

விழுப்புரம்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் நாடு தழுவிய பாரத் பந்த்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் 3 ஆயிரம் கடைகள் இன்று (டிச.8) அடைக்கப்பட்டன.

கடைகள் அடைப்பு
கடைகள் அடைப்பு

By

Published : Dec 8, 2020, 3:27 PM IST

வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் இன்று (டிச.8) 13ஆவது நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான தோழமைக் கட்சியினரும், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், விழுப்புரத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ், வணிகர் சங்கம் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனம், உணவகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட 3 ஆயிரம் கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

இதே போல திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி ஆகிய பகுதியிலும் 200 கடைகளை மூடி வியாபாரிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details