இதுத்தொடர்பாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,
"கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 23, 24ம் தேதிகளில் ரமலான் நோன்பு தொடங்கவுள்ளதால் பள்ளிவாசல் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் ரமலான் நோன்புக்கு மொத்த அனுமதியின் கீழ் விண்ணப்பித்து, அவர்களுக்கான அரிசி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறக்கப்பிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட தனி வட்டாச்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
ஒதுக்கீடு செய்யப்படும் அரிசியினை பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒரே தவணையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளிலிருந்து நுகர்வு செய்து அதனை பதிவு செய்யப்பட்டுள்ள தகுதியான நபர்களின் வீடுகளுக்குச் சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்க வேண்டும். மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பள்ளிவாசல்களில் ரமலான் நோன்பு கஞ்சி காய்ச்சுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.