விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள இடையன்சாவடி கிராமத்தில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு... இடையான்சாவடி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! - idayansavadi village people
விழுப்புரம்: உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இடையான்சாவடி கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
tower
இந்நிலையில், இங்குள்ள விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கான பணியில் மின்சார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதே பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி இடையான்சாவடி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.