விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதுவரை சுயேச்சை வேட்பாளர்கள் அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், அரசன், ராஜா, ரவிக்குமார் ஆகிய நான்கு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கந்தசாமி, தமிழ்ப் பேரரசு கட்சியின் நிர்வாகி இயக்குநர் கவுதமன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், கடைசிநாளான அக்டோபர் 30ஆம் தேதி திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல்... நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு