தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த விஜயகாந்த்! - elecation canvaas in vikkiravaandi

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் இறுதிகட்ட இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட விஜயகாந்த் இரட்டை இலைக்கே வாக்களியுங்கள் என்பதை மட்டுமே திரும்பத் திரும்பக் கூறி வாக்கு சேகரித்துள்ளார்.

vijayakaanth elecation canvaas in vikkiravaandi

By

Published : Oct 19, 2019, 8:27 PM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு பரப்புரையில் ஈடுபடுவதால் அக்கட்சியினர் மேளதாளம், கச்சேரி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், பரப்புரையில் ஈடுபட்ட விஜயகாந்த் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, 'மக்கள் அனைவரும் இரட்டை இலைக்கே வாக்களியுங்கள்' என்றும் 'மக்களின் சின்னம் இரட்டை இலை' என்றும் திரும்பத் திரும்ப கூறிவந்தார்.

விக்கிரவாண்டி கச்சேரி நிகழ்ச்சிகள்

இதனைத்தவிர வேறு எதுவும் அதிகமாக பேசாமல் அவர் தனது பரப்புரையை முடித்துக் கொண்டார்.

மேலும் படிக்க:இடைத்தேர்தல் களம்: இறுதிகட்ட வாகன பரப்புரையில் புதுச்சேரி முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details