தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஹைட்ரோகார்பன் திட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும்' -வைகோ - hydrocarbon project

விழுப்புரம்: தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு கொடுத்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து மனித சங்கலி போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

vaiko

By

Published : Jun 24, 2019, 7:28 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தொடங்கி வைத்த 'பேரிழப்புக்கு எதிரான பேரியக்கம்' சார்பில் மரக்காணத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய வைகோ, "மத்திய அரசு திட்டமிட்டே தமிழகத்தை அழிக்கும் வேலைகளில் இறங்கி உள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் இதனால் தமிழ்நாடு பாலைவனமாகும் எனவே, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கொடுத்த உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details