மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியின் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழுப்புரத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, இந்துத்துவா கூட்டம் மதசார்பின்மைக்கு கொள்ளி வைக்கும் கூட்டம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாசாரம் என்ற ஒற்றை தன்மையை திணிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்த, மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகாவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த, அதானி-அம்பானி கம்பெனிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்த, ஜிஎஸ்டி மூலம் வணிகர்களின் வாழ்க்கையை நாசமாக்கிய மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்.
தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நிலைமை நாசமாகி விட்டது. 2 ஆயிரம் கோடி நிலுவைத்தொகையை பெற்றுதர எடப்பாடி பழனிசாமி அரசு தயாராக இல்லை. ஊழல் புதைமணலில் எடப்பாடி அரசு சிக்கி தவிக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லை” என உரையாற்றினார்.