தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் அருகே கள்ளச்சாரயம் விற்பனை - இருவர் கைது! - கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

விழுப்புரம்: கோட்டக்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Two arrested for counterfeit liquor sale in kottakuppam
கள்ளச்சாரயம் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

By

Published : Sep 21, 2020, 2:31 PM IST

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர் விஷ்ணுபிரியா தலைமையிலான காவல் துறையினர் நேற்று இரவு (செப். 20) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது கோட்டக்குப்பம் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஆண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரைக் கைதுசெய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த கள்ளச்சாராயம், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: லாரி பேட்டரிக்குள் கஞ்சா கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details