விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள தொட்டி கிராமத்திலிருந்து அனுமதியின்றி வீடு கட்ட பயன்படும் கருங்கல் ஏற்றி வருவதாக விழுப்புரம் மாவட்ட உதவி புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் லட்சுமி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்த டிராக்டர்கள் பறிமுதல்
விழுப்புரம்: கருங்கல் ஏற்றி வந்த டிராக்டர்களை புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கட்டுக்கல்
இந்நிலையில், லட்சுமி பிரியாவின் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக கருங்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, கருங்கற்களை ஏற்றி வந்த டிராக்டர்களை பறிமுதல் செய்து திருக்கோவிலூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், டிராக்டர் ஓட்டி வந்த பச்சை முத்து(27) மற்றும் பிரபு (28) ஆகியோரையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.