தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருங்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் மூவர் நீதிமன்றத்தில் சரண்! - குற்றவியல் நீதிமன்றம்

சென்னை பெருங்குடியில் வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

three suspects surrender court in connection of  villuppuram advocate murder
சென்னை பெருங்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை.. நீதிமன்றத்தில் சரணடைந்த குற்றவாளிகள்..

By

Published : Mar 28, 2023, 7:29 AM IST

சென்னை:பெருங்குடி பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ்(வயது 33) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெருங்குடி, ராஜா நகர் பகுதியில் வசித்து வருகிறார். மேலும், இவர் தனது சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு கடந்த 25-ம் ஆம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவர், வழக்கறிஞர் ஜெய்கணேஷை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால், மருத்துவமனையில் வழக்கறிஞர் சங்கத்தை சேர்ந்த பலர் ஒன்று கூடினர்.

இதனையடுத்து, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, வழக்கறிஞர் சங்கத்தினர் அனைவரும் கலைந்துச் சென்றனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து, வழக்கறிஞரை கொலை செய்த மர்ம கும்பலைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் குற்றவியல் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த முருகன், பிரவீன், ஸ்ரீதர் ஆகிய மூவரும், தாங்கள் தான் சென்னை பெருங்குடியில் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தனர். ஆனால், அவர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், அவர்கள் மனு வாபஸ் பெறப்பட்டது.

இதையடுத்து வழக்கறிஞரை கொலை செய்த மூவர் மீதும் தாக்குதல் நடத்த நீதிமன்றம் வெளியே சிலர் குவிந்திருப்பதாக தகவல் வெளியானது. இதையறிந்த, நீதிபதி ராதிகா தனது அதிகாரத்தை பயன்படுத்தி மூன்று பேரையும் ஐந்து நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வேடம்பட்டில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details