விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில், விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவல் துறையினர் இன்று அதிகாலை 2 மணியளவில் வீரபாண்டி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த கோபி, வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த இருவரை கைதுசெய்து, இவர்களிடமிருந்து 200 லிட்டர் சாராய ஊறல், 40 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர்.