விழுப்புரம்: ராணிப்பேட்டை மாவட்டம் கீரம் பாடி பகுதியை சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன்(60). இவர் குடும்பத்துடன் தனது காரில் மதுரை சென்றுவிட்டு நேற்று மீண்டும் ராணிப்பேட்டை திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதியது.
விழுப்புரம் லாரி விபத்து... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு... - Senchi Government Hospital
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ராஜேந்திரன், அவருடைய மனைவி சாந்தி, அவரது மகன் அழகு ராஜா மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த உறவினர் சகுந்தலா தேவி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வளத்தி போலீசார், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொத்தம் வாடி சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர்(28) என்பவரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு... 100 அடி உயர டவர் மீது ஏறி இளைஞர்கள் போராட்டம்...