விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகேயுள்ள டி.குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வர்மா(எ)சுரேந்தர். கேலி சித்திரங்கள் வரைவதில் பிரபலமான இவர், அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்த கேலி சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார். மிகவும் சர்ச்சைக்குள்ளான வகையில் இருந்த இந்தக் கேலி சித்திரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, விசிகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் பகுதி விசிக ஒன்றியச் செயலாளர் இளவரசு என்பவர் திருமாவளவன் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் கேலி சித்திரம் வரைந்த வர்மாவைக் கைது செய்யுமாறு திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், டி.குமாரங்கலத்தில் வீட்டில் இருந்த வர்மாவைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
சர்ச்சையான திருமாவளவன் குறித்த கேலி சித்திரம்: கார்டூனிஸ்ட் வர்மா கைது! - திருமாவளவன் கார்ட்டூன்
விழுப்புரம்: மக்களவை உறுப்பினர் திருமாவளவன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேலி சித்திரம் வரைந்த கார்டூனிஸ்ட் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
Thirumavalavan cartoonist varma