தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை - கள்ளக்குறிச்சியில் திருட்டு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து 43 பவுன் நகைகள் பட்டப்பகலில் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

kallakurichi

By

Published : May 28, 2019, 6:45 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் சுப்ரமணியன், காசிநாதன், தமிழரசன் ஆகிய மூன்று பேரின் குடும்பத்தினரும் நேற்று விவசாயப் பணிகளுக்காக வயலுக்குச் சென்றனர்.

இதனையடுத்து அவர்களது வீடுகளில் உள்ள பின் பக்கக் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 43 பவுன் நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.

Kallakurichi

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் விளம்பாவூர் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details