தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை - ஆசிரியர்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் ஆசிரியர் வீட்டில் புகுந்து 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையர்கள் கைவரிசை

By

Published : May 2, 2019, 1:50 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வசித்து வருபவர் கதிர்வேல். இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கதிர்வேல் ஏப்ரல் 28ஆம் தேதி தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு ஓசூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளர். இந்நிலையில் வீடு பூட்டியிருப்பதை கண்ட கொள்ளையர்கள் நேற்று இரவு( மே 1) வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின், பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 3 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .

ஆசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

இந்நிலையில் இன்று (மே 2) காலை வீடு திரும்பிய கதிர்வேல் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்சியடைந்தார். கதிர்வேல் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கபட்டும் அதில் வைக்கப்பட்டிருந்த நகை பணம் திருடு போனதும் தெரிய வந்தது.

உடனே இதுகுறித்து கதிர்வேல் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபணர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details