விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள கோனூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன். கூலித்தொழிலாளியான இவருக்கு ராஜேஸ்வரி (37) என்கிற மனைவியும், ஆதித்யா (22) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இருதினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கந்தன் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது.
சுவர் இடிந்து விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் படுகாயம் - Nivar cyclone
விழுப்புரம்: காணை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் தாய் உயிரிழந்தார். மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
விழுப்புரம்
இதில் ராஜேஸ்வரி மற்றும் ஆதித்யா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயங்களுடன் ஆதித்யா முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக காணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.