தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் - படிக்கெட்டில் பயணித்த மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் படிகட்டில் பயணித்தால் அவர்களின் பெற்றோர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும்
படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும்

By

Published : Sep 25, 2022, 10:05 AM IST

விழுப்புரம்:தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணங்களை மேற்கொள்வதும், அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிடுவதுமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதனால் விபத்துகளும் பதிவாகி வருகின்றன. அதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிக கிராமங்களைக் கொண்ட மாவட்டமான விழுப்புரம், மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண வசதியை அளிக்கும் மாவட்டமாக உள்ளது.

படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கினால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும்
இதனை கருத்தில்கொண்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, விழுப்புரம் மாவட்டத்தில் இனி மாணவர்கள் படிக்கட்டு பயணம் மேற்கொண்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details