தமிழகத்தில் மக்களவை தேர்தல் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் முடிந்து கடந்த 19ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.
விழுப்புரம் தொகுதியில் முதல் வேட்புமனு தாக்கல்! - ராஜா
விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மூன்றாவது நாளான இன்று விழுப்புரம் தொகுதியில் முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மக்களவை தொகுதியை பொறுத்தவரை முதல் இரண்டு நாட்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மூன்றாவது நாளான இன்று அகில இந்திய மக்கள் கழகத்தின் வேட்பாளர் ராஜா, தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இதுதான் விழுப்புரம் தொகுதியில் தாக்கலான முதல் வேட்புமனு.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தை அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த இவர், அகில இந்திய மக்கள் கழகத்தின் மாவட்ட தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், அஷ்வந்த், பிரகதீஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். லாரி உரிமையாளரான ராஜா 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.