தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Woman IPS officer sexual assault case: பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் வழக்கு - நவ.20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு Woman IPS officer sexual assault case வழக்கின் விசாரணை நவ.20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கபப்ட்டது.

பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் வழக்கு
பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் வழக்கு

By

Published : Nov 15, 2021, 5:06 PM IST

Updated : Nov 15, 2021, 5:25 PM IST

விழுப்புரம்:பிப்ரவரி மாதம் பெண் ஐபிஎஸ் அலுவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை (Woman IPS officer sexual assault case) அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், அவருக்கு உதவியதாக இருந்ததாக கூறப்படும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

வழக்கு ஒத்திவைப்பு

இந்நிலையில், நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் இன்று (நவ.15) நடந்த விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி மட்டும் ஆஜராகினார்.

தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் முக்கிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய கால அவகாசம் வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:கோவை மாணவி தற்கொலை: தனியார் பள்ளி முதல்வர் கைது

Last Updated : Nov 15, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details