விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தென் இந்திய அளவிலான கராத்தே சாம்பியஷிப் போட்டிகள் நடைபெற்றன. உலக கராத்தே சங்க நடுவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான சம்பத்குமார் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 1,500 பேர் கலந்துகொண்டனர்.
தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் நடைப்பெற்ற தென் இந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.
karathe championship
போட்டியை தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இணைய தலைவர் ராஜசேகர் மற்றும் கள்ளக்குறிச்சி ஏகேடி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மகேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் 5 முதல் 21 வயதுடையவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கராத்தே சங்க நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினர்களும் பதக்கங்கள், சான்றிதழ்கள், கேடயங்கள், கோப்பைகளை வழங்கி சிறப்பித்தனர்