விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக ரங்கராஜ் என்பவர் பணியாற்றிவந்தார். இந்நிலையில் இவர் அதேப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
ஓராண்டாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோவில் கைது! - 10-year-old-girl abuse case
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆசிரியர் ரங்கராஜை அழைத்து விசாரணை செய்தனர்.
அதில் கடந்த ஒரு வருடமாக பள்ளியின் அருகில் உள்ள ஆசிரியரின் வீட்டிற்கு சிறுமியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், மேலும் இது குறித்து வெளியே சொன்னால் அடித்துக்கொன்று விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டி வந்தது தெரிவந்துள்ளது. இதனையடுத்து சிறார் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் ரங்கராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.