விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 196 அரசு ஆதி திராவிடர், நகராட்சி, நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மடிக்கணினிகளை வழங்கினார்.
மாணவர்கள் மீது தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது - ஆட்சியர்
விழுப்புரம்: பள்ளிக் கல்வித் துறை மீதும், மாணவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அரசின் விலையில்லா மடிக்கணினி
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் 'விழுப்புரத்தில் இந்த ஆண்டு மட்டும் 66 கோடியே 56 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்குகின்ற மடிக்கணினியை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாகவும், கல்விக்காகவும் பயன்படுத்தி கொள்ளவேண்டும். பள்ளி கல்வித் துறை மீதும், மாணவர்கள் மீதும் தமிழ்நாடு அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.