தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#CAA PROTEST டெல்லியில் மயானா அமைதி நிலவுகிறது - தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு குற்றச்சாட்டு! - குடியுரிமை சட்டத்திற்கு தமிழ் நாட்டு போராட்டம்

விழுப்புரம்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு, தலைநகர் டெல்லி தற்போது மயானம் போல் காட்சி அளிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

Tamil Nadu Thowheed Jamath protested in villupuram against CAA
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு

By

Published : Dec 18, 2019, 11:14 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த அமைப்பின் மாநில செயலாளர் கே.ஏ. சையது அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சையது அலி,

"தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மட்டும் பங்கேற்கவில்லை, ஒட்டுமொத்த இந்தியாவும் பங்கேற்றுள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் கண்டன ஆர்ப்பாட்டம்

தலைநகர் டெல்லி இன்று மயானம் போன்று அமைதியாக உள்ளது. உலகத் தலைவர்கள் யாரும் டெல்லிக்கு வரவில்லை. மேலும் வெளிநாட்டு தூதரகங்கள் முடங்கி உள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு, இந்த சட்டத்தை ரத்து செய்து இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, ஜனநாயகம் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டும்" என்றார்.

நீதிமன்ற பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழுக்குரைஞர்கள்

இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி விழுப்புரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழுக்குரைஞர்கள் இன்று நீதிமன்ற பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்படத்தக்கது.

இதையும் படியுங்க:

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு - முதல்வர் வீட்டை முற்றுகையிட ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம்

ABOUT THE AUTHOR

...view details