தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுமுறை முடிந்து பள்ளி விடுதிக்குச் சென்ற மாணவன் மரணம் - மரணம்

விழுப்புரம்: மேல்நாரியப்பனூரில் விடுமுறை முடிந்து பள்ளி விடுதிக்குச் சென்ற 8ஆம் வகுப்பு மாணவன் திடீர் காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்

By

Published : Jun 5, 2019, 8:40 AM IST

கடலூர் மாவட்டம் சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மகன் சஞ்சய் (13). சின்னசேலம் அடுத்துள்ள மேல்நாரியப்பனுர் அரசு உதவிபெறும் பள்ளியில் சஞ்சய் படித்துவருகிறான். கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளி விடுதிக்கு திரும்பிய மாணவன் இரவு உணவருந்தியுள்ளான்.

விழுப்புரம்

உணவருந்திய ஒரு மணி நேரத்தில் மாணவனுக்கு திடீரென காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. உடல்நடுக்கத்துடன் கட்டுக்கடுங்காத காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மாணவனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக விடுதி காப்பாளர் கொண்டு சென்றுள்ளார்.

சிகிச்சையளித்த அரை மணி நேரத்தில் மாணவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்து சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மாணவனின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details