கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் பிரியதர்ஷினி. எட்டாம் வகுப்பு மாணவியான பிரியதர்ஷினி, பரிக்கல் கிராமத்தில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் தங்கி படித்துவந்தார். இதனிடையே நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்கு முன் மொட்டை மாடியில் காய வைத்திருந்த தனது சீருடையை எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு! - School girl electrocuted to death
கள்ளக்குறிச்சி: பரிக்கல் அருகே மாடியில் காய வைத்திருந்த தனது சீருடையை எடுக்கச் சென்ற பள்ளி மாணவி உயர் மின் அழுத்த கம்பியில் சென்ற மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
அப்போது அருகாமையிலிருந்த தெருவோரம் சென்ற உயர்மின் அழுத்த கம்பி பிரியதர்ஷினி மீது பட்டதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருநாவலூர் காவல் துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மாணவியின் இறப்பு குறித்து வழக்குபதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.