விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் உள்ள காந்தி ரோட்டில் நாராயணன் என்பவருக்கு சொந்தமான செல்ஃபோன் கடையில் அடையாளம் தெரியாத சிலர் கொள்ளையடித்துள்ளனர். கோயிலில் இருக்கும் கம்பிவேலை கொண்டு கடையின் பூட்டை உடைத்து, ஆறு லட்சம் மதிப்பிலான செல்ஃபோன்களை திருடி சென்றனர்.
செல்ஃபோன் கடையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்ளை - செல்போன் கடையில் திருட்டு
விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் செல்ஃபோன் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்ஃபோனை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.
செல்போன் கடையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்ளை
காலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த நாராயணன் கடையைத் திறக்கும்போது பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.