விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை, தலைமைக் காவலர் இந்திரஜித் ஆகியோர் ரங்கநாதபுரம் கூட்டுசாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தனர்.
மேலும் அந்த வாகனத்தில் அண்டை (பாண்டிச்சேரி) மாநில மது பாட்டில்கள் 60 பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், மாத்தூர் திருக்கை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரைக் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர்.
கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதனையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வானூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை மற்றும் தலைமைக் காவலர் இந்திரஜித் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.