உளுந்தூர்பேட்டை அடுத்த துர்கா நகரில் வசித்துவருபவர் ஆதிநாராயணன். இவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அரசு ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி அங்குள்ள அரசுப் பள்ளில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார்.
அரசு ஊழியர் வீட்டில் 20 சவரன் திருட்டு!
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் அரசு ஊழியர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று ஆதிநாராயணனின் மனைவி வெளியூருக்குச் சென்று விட்டதால் வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளார். இதை அறிந்த திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்த தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பட்டப்பகலிலேயே அரசு ஊழியர் வீட்டில் நடந்த கொள்ளைச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.