விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவருக்கு இந்திரா, லீலா என்கிற இரு மனைவிகள் உள்ளனர். இதில் இந்திரா விழுப்புரத்திலும், லீலா திருக்கோவிலூரிலும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் வசித்து வந்த இந்திரா, கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் பாதி உடல்கள் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இரண்டாவது மனைவி மீது கொள்ளை பிரியம்: முதல் மனைவியை கொன்ற ஆசிரியர்
விழுப்புரம்: இரண்டாவது மனைவி மீது வைத்த அன்பின் காரணமாக முதல் மனைவியை கொலை செய்த ஓய்வுபெற்ற ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது இந்திராவின் கணவர் நடராஜன் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் வந்ததால் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் இந்திராவை நடராஜன் கொலை செய்தது தெரியவந்தது. தனது இரண்டாவது மனைவி லீலா மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகவே இந்திராவை நடராஜன் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.