தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க கோரிக்கை - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை
ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை

By

Published : May 8, 2021, 2:41 PM IST

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ( NLC India Ltd ) மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய வசதி இருக்கிறதா என்று அதனுடைய சேர்மன் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராக்கேஷ்குமாரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த ரவிக்குமார்,

அதன் பின்னர், அங்கு உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் மருத்துவப் பயன்பாட்டுக்கு தகுதியானது அல்ல, புதிதாக 5 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை என்எல்சி சார்பில் அமைக்க இருப்பதாகக் கூறினார். சென்னையில் அரசு மருத்துவமனைகளில் 3 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களும், நெய்வேலி என்எல்சி வளாகத்தில் 2 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களும் அமைய உள்ளன என்றார்.

அரசு மருத்துவமனை கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க கோரிக்கை

சென்னையில் அமையவுள்ள நிலையங்களில் மணி ஒன்றுக்கு 30 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும். சென்னையில் அமைக்கப்படும் நிலையங்கள் தலா 65 லட்சம் ரூபாய் செலவிலும், நெய்வேலியில் அமைய உள்ள நிலையங்கள் 75 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். அவற்றுக்கான டெண்டர் கோரப்பட்டு விட்டதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அந்த நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து ஆக்ஸிஜன் உற்பத்தி துவங்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டிலிருந்த அதிமுக அரசின் சார்பிலோ, அலுவலர்களின் சார்பிலோ கோரிக்கை விடுக்கப்பட்டு இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவில்லை. ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநில அரசுகளின் சார்பில் அந்தந்த மாநிலங்களில் CSR நிதியைக்கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்துத்தருமாறு கோரிக்கை வந்தது. அங்கெல்லாம் செய்யும்போது தமிழ்நாட்டில் செய்யவில்லையே என மக்கள் கேட்பார்களே எனப் பயந்து என்எல்சி நிர்வாகமே தமிழ்நாடு அரசை அணுகி இதற்கான முயற்சியை மேற்கொண்டது.

தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்த இந்த முயற்சியை எடுத்ததற்காக என்எல்சி நிர்வாகத்தைப் பாராட்டுகிறேன். தூத்துக்குடியிலும் இப்படியொரு நிலையம் அமைக்கப்படவுள்ளதாக அறிகிறேன். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் CSR நிதியின் கீழ் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்துத் தருமாறு கேட்டு என்எல்சி நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க:திருநங்கைகளுக்கும் இலவச பயணம்...ட்வீட்டுக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details