தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி - விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க கோரிக்கை - Thiruvennanallur panchayat included in Kallakurichi

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் சேர்க்கப்பட்டுள்ள திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை பழையபடி அருகிலுள்ள விழுப்புரத்துடனே சேர்க்க வேண்டும் என மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவெண்ணநல்லூர் பேரூராட்சி

By

Published : Aug 27, 2019, 6:46 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்துவந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாகும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, கடந்த ஜனவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

திருவெண்ணநல்லூர் பேரூராட்சி - விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க கோரிக்கை

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்துடன் இருந்த திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை பிரித்து புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த திருவெண்ணைநல்லூர் சேர்ந்த பொது மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

திருவெண்ணைநல்லூரில் இருந்து விழுப்புரம் செல்வதற்கு 20 கி.மீ, ஆனால் கள்ளக்குறிச்சிக்கு 70 கிலோமீட்டர் ஆகும். அருகில் இருக்கும் விழுப்புரத்தில் சேர்க்காமல் கள்ளக்குறிச்சியியோடு சேர்த்தது தங்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் மனிதச்சங்கிலி போராட்டம்

இந்நிலையில், திருவெண்ணநல்லூர் பேரூராட்சியை பழையபடி அருகிலுள்ள விழுப்புரத்துடனே சேர்க்க வேண்டும் என்று திருவெண்ணைநல்லூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதச்சங்கிலி போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details