விழுப்புரம்: அரகண்டநல்லூர் மற்றும் அதை ஒட்டி உள்ள பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து கொடி கட்டி பறக்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட கடைவீதி மார்க்கெட் கமிட்டி, மணம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் இருசக்கர வாகனத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அரகண்டநல்லூர் நகரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், ஒழுங்குமுறை விற்பனை கூடம், பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை மறைமுகமான பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்துக் கொண்டு கூலித் தொழிலாளிகளை குறி வைத்து இந்த லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக தெரியவருகிறது. அன்றாடம் வாழ்வாதாரத்திற்காக உடலுழைப்பை மட்டுமே நம்பியுள்ள கூலித் தொழிலாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவைத்து தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை கொடி கட்டி பறந்து வருகிறது.